பெரும் சோகம்.. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி..!
பெரும் சோகம்.. தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி..!
ஆந்திர மாநிலம், அக்கிரெட்டிகுளம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், நேற்று இரவு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் பலரும் தீயில் சிக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயில் சிக்கி இருந்தவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இருப்பினும், தீயில் கருகி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.