பெரும் சோகம்.. குழந்தையால் வயதான கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு !!

பெரும் சோகம்.. குழந்தையால் வயதான கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு !!

Update: 2022-02-18 17:30 GMT

மன உளைச்சலில் இருந்த மூத்த தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை பகுதியில் நம்பிராஜன் (76), பாப்பா (76) என்ற வயதான தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் அங்கு கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். திருமணமாகி சுமார் 50 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும்  தங்களுக்கு குழந்தை இல்லாத விரக்தியில் மன உளைச்சலில் இருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் நம்பிராஜனை, அவரது சகோதரர் செல்போனில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை. பல முறை அழைத்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த சகோதரர் இரவு வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்தபோது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையிலும், மனைவி பாப்பா படுக்கையறையிலும் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்நிலை சரியில்லாததாலும், குழந்தைகள் இல்லாமல் தனிமையில் இருந்ததாலும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவரது சகோதரர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் தற்கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


newstm.in
 

Similar News