பெரும் சோகம்.. சாலை விபத்தில் இரு நடிகர்கள் பலி
பெரும் சோகம்.. சாலை விபத்தில் இரு நடிகர்கள் பலி;
தியேட்டர் ரசிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். இந்நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள் கொண்டுள்ளது. பயனாளர்கள் மாதம் அல்லது வருட கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி பல மொழி திரைப்படங்கள், தொடர்களை பார்த்து வருகின்றனர்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் 'தி ஜோசன் ஒன்ஸ்' என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ. இந்நிலையியில், இவர்கள் இருவர் உள்பட மேலும் சில நடிகர், நடிகைகள் நெட்பிளிக்ஸ் தொடர் படப்பிடிப்பிற்காக மெக்சிகோ நாட்டின் முலிஜி நகருக்கு சென்றனர்.
அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் ஒரு வேனில் அமெரிக்காவுக்கு திரும்பினர். பஜா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த நடிகர்கள் ரெமுண்டோ கிராண்டுனோ குரூஸ் மற்றுன் ஜூயன் பிரான்சியோ ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த படக்குழுவினர் 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in