பெரும் சோகம்.. தொட்டியை திறந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி..!

பெரும் சோகம்.. தொட்டியை திறந்த தொழிலாளி விஷவாயு தாக்கி பலி..!

Update: 2022-05-19 06:00 GMT

புதுச்சேரி அருகே திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (47). கூலித் தொழிலாளியான இவர், திருபுவனை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது, கழிவுநீர் தொட்டியை திறந்தவுடன் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருபுவனை காவல்நிலைய போலீசார், ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News