தனது திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என்று மாப்பிள்ளை ஆத்திரம்!!

தனது திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என்று மாப்பிள்ளை ஆத்திரம்!!

Update: 2022-06-19 18:40 GMT

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் திர்தோல் தொகுதி எம்.எல்.-வாக இருப்பவர் பிஜய் சங்கர் தாஸ். இவருக்கும் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டனர்.

இதற்காக இருவரும் சேர்ந்து திருமண பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பித்தனர். விதிமுறையின் படி 30 நாட்களில் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும்.

இதனால் 30 நாள்கள் முடிந்து திருமணத்தை பதிவு செய்ய இருவரும் நாள் குறித்தனர். அதன்படி குறிப்பிட்ட அந்த நாளில் பெண் மற்றும் அவரது வீட்டார் ஆகியோர் திருமண பதிவு அலுவலகத்துக்கு வந்தனர்.

ஆனால், சொன்ன நாளில் எம்.எல். பிஜய் சங்கர் தாஸ் பதிவு அலுவலகத்துக்கு வரவில்லை. மேலும் பெண் தரப்பில் இருந்து போன் மூலம் பலமுறை தொடர்பு கொண்ட நிலையிலும் அவர் அதற்கு பதிலளிக்காமல் இருந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண், எம்.எல். ஏமாற்றி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பதிவு அலுவலகத்துக்கு செல்லவேண்டும் என்று அந்தப் பெண்ணோ அல்லது வேறு யாரும் என்னிடம் சொல்லாததால் நான் போகவில்லை எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Similar News