மாப்பிள்ளை கைத்துப்பாகியால் வானத்தை நோக்கி சுட்டதில் நண்பன் உயிரிழப்பு ..!!

மாப்பிள்ளை கைத்துப்பாகியால் வானத்தை நோக்கி சுட்டதில் நண்பன் உயிரிழப்பு ..!!

Update: 2022-06-26 04:30 GMT

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பிரம்ம நகரில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் மணமகன் மனீஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார்.

ஆனால், மனீஷ் வைத்திருந்த கைத்துப்பாக்கி முதலில் வேலை செய்யவில்லை. இதனால், துப்பாக்கி ஏன் சுடவில்லை? என மனீஷ் சோதனை செய்தபோது, திடீரென மனீஷ் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து சீறி பாய்ந்த குண்டு, மனீஷின் நண்பரான பாபு லால் மீது பாய்ந்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்த பாபு லாலை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



உயிரிழந்த பாபு லால் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனீஷ் பயன்படுத்திய கைத்துப்பாக்கி பாபு லாலுடையதாகும். இந்த சம்பவம் தொடா்பாக மனீஷ் குடும்பத்தினா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். துப்பாக்கியால் சுட்ட மாப்பிளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

வடமாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பழக்கம் சில பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News