குரூப் 4 தேர்வு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி !!
குரூப் 4 தேர்வு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி !!
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு தேர்வு செய்து வருகிறது. திறமையான ஊழியர்களை கண்டறிய பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர். அரசு பணிகளின் அடிப்படையில் இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.), தட்டச்சர், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட 7 ஆயிரத்து 382 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.
அந்த வகையில், குரூப் 4 தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அதன்படி, தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய ஒருமுறை பதிவேற்ற மூலம் (ஓடிஆர்) கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in