42.2 கிலோ மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!
42.2 கிலோ மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!;
ஈகோ மெர்மெய்ட் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த மெர்லே லீவாண்ட் என்ற பெண் மோனோஃபின் அணிந்து கடற்கன்னி போல், கடலில் 42.2 கிலோ மீட்டர் நீந்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் புத்தகத்தின் தகவல் படி, கடந்த மாதம் 7-ம் தேதியன்று, மியாமி 'ஈகோ மெர்மெய்ட்' மெர்லே லீவாண்ட் அமெரிக்காவின் புளோரிடாவின் மியாமி கடற்கரையில் 42.2 கிலோ மீட்டர்களை (26.22 மைல்கள்) கடலில் நீந்தி தனது சொந்த சாதனையை முறியடித்தார். இதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரம் 11 மணிநேரம் மற்றும் 54 நிமிடங்களாகும்.
அவர் ஒரு தொழில்முறை நீச்சல் வீரர் என்பதையும் தாண்டி, அவர் நான்கு முறை உலக சாதனை படைத்தவர், கடல் பாதுகாவலர் மற்றும் கடலை மீட்பதற்காக பணிபுரியும் அக்வாப்ரீனர் ஆவார்.
வடஐரோப்பாவின் எஸ்தோனியா நாட்டின் தாலின் நகரைச் சேர்ந்தவர் மெர்லே லீவாண்ட். இவர் ஒரு பனி நீச்சல் வீரர் மற்றும் முன்னாள் பால்டிக் சாம்பியன் ஆவார். இவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குடியேறினார்.
நான் தன்னுடல் எதிர்ப்பு சக்தி பிரச்சினைகளுடன் பிறந்தேன், என் நுரையீரல் சரிந்ததால் நான் நீந்த ஆரம்பித்தேன். இன்று, என் எண்ணம் அன்னை பூமியின் நுரையீரலுக்காக போராட வேண்டும் என்று மெர்லே லீவாண்ட் கின்னஸ் உலக சாதனையில் கூறினார்.