பெரும் பரபரப்பு.. பா.ரஞ்சித்தின் நண்பரான குஜராத் எம்.எல்.ஏ திடீர் கைது !!
பெரும் பரபரப்பு.. பா.ரஞ்சித்தின் நண்பரான குஜராத் எம்.எல்.ஏ திடீர் கைது !!
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய குற்றத்திற்காக குஜராத் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலத்தின் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவானவர் ஜிக்னேஷ் மேவானி. அந்த தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மேலும் தற்போதும் காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், குஜராத்தின் பலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் இருந்து அசாம் காவல்துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில், இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இன்று காலை அசாமுக்கு விமானம் அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் சமூக வலைதளத்தில் பரப்பிய பதிவுகள் நீக்கப்பட்டது.
இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான குற்றங்களைக் கையாளும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153ஏ இன் கீழ் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் அகமதாபாத் விமான நிலையத்திற்கு விரைந்து வந்து ஆளும் பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு மிக நெருக்கமானவர். சென்னையில் அவர் நடத்திய நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி கலந்துகொண்டுள்ளார்.
newstm.in