ஐபிஎல்- ராஜஸ்தான் அணியை பந்தாடி முதலிடத்துக்கு சென்றது குஜராத் !

ஐபிஎல்- ராஜஸ்தான் அணியை பந்தாடி முதலிடத்துக்கு சென்றது குஜராத் !

Update: 2022-04-15 05:30 GMT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 24ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் நேற்றிரவு மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ வேட் 12 ரன்கள் இருக்கும் போது ரன் அவுட் முறையில் அவுட் ஆனார்.

அடுத்ததாக வந்த தமிழக வீரர் விஜய் சங்கர் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சுப்மன் கில் 13 எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 
பின்னர் ஹர்த்திக் பாண்ட்யா-அபினவ் மனோகர் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மனோகர் சாஹல் பந்து வீச்சில் வெளியேறினார். எனினும் சிறப்பாக ஆடிய கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, சிக்சர், பவுண்ட்ரிகளாக பறக்கவிட்டார்.  52 பந்துகளில் 87 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அவர் களத்தில் இருந்துர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. 

இதனால் 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி களமிறங்கி விளையாடியது. அந்த துவக்க வீரர் ஜோஸ் பட்லர் வழக்கம் போல் தொடக்கத்தில் பட்டாசு போன்று அதிரடி நிகழ்த்தினார். 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். படிகல்  ரன் எதுவும் எடுக்காத நிலையில் அவுட்டானார். 

கேப்டன் சஞ்சு சாம்சன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். கடைநேரத்தில் தனி ஆளாக போராடிய ஹெட்மயர் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ராஜஸ்தான் தோல்வி உறுதியானது. இறுதியில் ராஜஸ்தான் அணி  20  ஓவர் முடிவில் 9  விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள்  எடுத்தது. இதன்மூலம் குஜராத் அணி 37  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது குஜராத் அணிக்கு நான்காவது வெற்றியாகும். இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி  முதலிடத்துக்கு சென்றது.

newstm.in

 

Tags:    

Similar News