விடுமுறை அறிவிப்பு... இந்த மாவட்டத்தில் மட்டும்!!

விடுமுறை அறிவிப்பு... இந்த மாவட்டத்தில் மட்டும்!!

Update: 2022-07-21 20:18 GMT

கோவில் திருவிழா என்பதால் சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்ததந்த மாவட்டத்தில் நடக்கும் உள்ளூர் திருவிழாக்களுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை விடுவது உண்டு. அந்த வகையில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது.

எனவே அந்த நாள் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஆடி மாதம் என்றாலே கோவில் திருவிழாக்கள் அதிக அளவில் நடைபெறும்.

அந்த வகையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை.

தற்போது நோய் பரவல் குறைந்து கொரோனா பெரிய அளவில் பாதிக்காத சூழல் உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News