தலைமுடிக்கு கலரிங்.. கண்டித்த கல்லூரி.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!
தலைமுடிக்கு கலரிங்.. கண்டித்த கல்லூரி.. மாணவி எடுத்த விபரீத முடிவு..!
ஹேர் கலரிங் செய்து கல்லூரிக்கு சென்ற மாணவியின் பெற்றோரை அழைத்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை தாம்பரம், கடப்பேரி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவி. இவர், பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் ராகவி, தனது தலைமுடிக்கு கலரிங் செய்தபடி கல்லூரிக்கு சென்றுள்ளார்.
இதனால் அவரை கண்டித்த கல்லூரி நிர்வாகம், அவருடைய பெற்றோரை வரவழைத்து கல்லூரிக்கு இது போன்று வரக்கூடாது என கூறி கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகவி, நேற்று மாலை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த தாம்பரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.