இன்று காலை 11.30 மணிக்கு வெளியாகிறது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!!

இன்று காலை 11.30 மணிக்கு வெளியாகிறது நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்!!

Update: 2022-07-12 09:20 GMT

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜுலை 17ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இருக்கும் மையங்களில் இந்த தேர்வு நடைபெறும். முன்னதாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்புச் சீட்டை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

எந்தெந்த நகரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது தொடர்பான விவரங்கள் மட்டும் இதில் இடம் பெற்றிருக்கும். விண்ணப்பதாரர்கள் அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது.

தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல் ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு நேரம் - பிற்பகல் 2 முதல் 05.20 மணி வரை. தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் வர வேண்டும். வளாகத்திற்குள் பிற்பகல் 1.30 மணிக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த ஆண்டு நீட்த் தேர்வு இந்தி , தமிழ் உட்பட 13 மொழிகளில் நடைபெறுகின்றது.

முன்னதாக ஹால்டிக்கெட் திங்கள்கிழமை வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் வெளியிடாத முடியாத நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று நேற்று அறிவித்தது.

இந்நிலையில் தேர்விற்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்றும், தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News