10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் !

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் !

Update: 2022-07-22 08:57 GMT

10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதனையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட்டு மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு உற்சாகமாக சென்று வருகின்றனர். அதேநேரம் 10, 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தேர்வை எழுதாதவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

அதன்படி, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று (22.07.2022) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்கள் விவரங்களை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
newstm.in

Similar News