குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Update: 2022-03-01 09:16 GMT

பொதுமக்களின் நலனுக்காக ரேஷன் கார்டுகள் மூலமாக நாட்டு மக்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒருபக்கம் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டாலும், இன்னொரு புறம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதில் மோசடிகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு உள்ளதுநிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவான அளவில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதாகப் பயனாளிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதற்குத் தீர்வுகாணும் வகையில் ரேஷன் கார்டில் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இதன்படி, அனைத்து ரேஷன் கடைகளிலும் எலெக்ட்ரானிக் எடை இயந்திரம் வைக்கப்படும். இதன் மூலம் மட்டுமே உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படும்.

இதில் உணவுப் பொருட்களை குறைவான அளவில் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும். அதோடு, பொதுமக்களுக்கும் உணவு விநியோகத்துக்கும் இடையில் ஒரு வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஷன் கார்டு விஷயத்தில் அரசு தரப்பிலிருந்து நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உணவு விநியோகச் சேவையில் எந்தப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்கான அரசு தரப்பிலிருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

newstm.in

Similar News