மாணவர்களுக்கு ஹேப்பி.. ஜூன் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..!
மாணவர்களுக்கு ஹேப்பி.. ஜூன் 12 வரை பள்ளிகளுக்கு விடுமுறை.. அமைச்சர் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் தடுப்பு விதிகளை பின்பற்றி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன.
இதையடுத்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன்படி, மே மாதம் 5-ம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்கி, மே மாதம் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
எனவே, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 13-ம் தேதி முதல் ஜூன் மாதம் 12-ம் தேதி வரை கோடைகால விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மே மாதம் 13ம் தேதி வரை 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 13 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.