குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..!

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. விரைவில் வெளியாகவுள்ளது அறிவிப்பு..!

Update: 2022-03-02 16:19 GMT

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, “திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் திமுக மட்டும் 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது.

திமுக ஆட்சி அமைந்து சுமார் ஒன்பது மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், வரும் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமை தொகை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News