தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! குறைந்து கொண்டே வரும் கொரானா பாதிப்பு..!!

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! குறைந்து கொண்டே வரும் கொரானா பாதிப்பு..!!

Update: 2022-02-05 14:30 GMT

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 9,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது, இதனால் மொத்த பாதிப்பு 33,97,238 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மேலும் 1,475 பேருக்கும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 8,441 பேருக்கு உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் 7,39,983 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று  கொரோனாவிலிருந்து 21,435 பேர் குணமடைந்தயுள்ளனர், இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,04,213 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,55,329 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று  ஒரே நாளில் 1,20,211 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 6,11,68,370 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் நேற்று  ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,696 ஆக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Similar News