நாடாளுமன்றம் செல்கிறார் ஹர்பஜன் சிங்!
நாடாளுமன்றம் செல்கிறார் ஹர்பஜன் சிங்!
ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பஞ்சாபின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார்.
மாபெரும் வெற்றியை தொடர்ந்து பஞ்சாபின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பகவந்த் மான் நேற்று பதவியேற்று கொண்டார். .
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஆம் ஆத்மியின் வெற்றிக்குப் பிறகு, ஹர்பஜன் சிங் , பகவந்த் மான் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் . ஆம் ஆத்மி கட்சிக்கும், நண்பர் பகவந்த்மான் அவர்களுக்கும் வாழ்த்து என அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in