பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்!!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடித்து வீட்டிற்குச் சோர்வாக வந்துள்ளார்.
இது குறித்து அவரது பெற்றோர் மாணவியிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவி தன்னை பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் பள்ளி மாணவியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தலைமை ஆசிரியர் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் இந்த சம்பத்தில் மேலும் ஒரு ஆசிரியருக்குத் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆகிய இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in