பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியை கைது!!
பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்த தலைமை ஆசிரியை கைது!!
பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்து அதை பகிர்ந்து சாப்பிட்டதற்காக அசாமில் தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோல்பரா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் டாலிமான் நெஸ்ஸா (56) என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி பள்ளிக்கு மாட்டிறைச்சி கொண்டு வந்ததாகவும், அதனை சக ஆசிரியர்களுக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்களுக்கு மாட்டிறைச்சி கொடுத்ததாக டாலிமான் நெஸ்ஸா மீது பள்ளி மேலாண்மை குழுவிடம், பிற ஆசிரியர்கள் புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளி மேலாண்மைக்குழு போலீஸில் புகார் அளித்தது.
அதன் அடிப்படையில் இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நெஸ்ஸா கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை.
ஆனாலும், 2021இல் இயற்றப்பட்ட பசு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிறுபான்மையினர்களையும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அடக்குமுறையை ஏவும் வகையில் பாஜக அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருவதில், பசுவதை தடுப்புச் சட்டமும் ஒன்று குறிப்பிடத்தக்கது.
newstm.in