நடிப்புக்கு முழுக்கு போட்டார் பிரபல நடிகர்..!

நடிப்புக்கு முழுக்கு போட்டார் பிரபல நடிகர்..!

Update: 2022-03-31 16:00 GMT

பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் வில்லிஸ். 1980-களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த புரூஸ், ‘டை ஹார்ட்’ படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இவர், ‘மனோஜ் நைட் ஷ்யாமளனின் சிக்ஸ்த் சென்ஸ்’, ‘அன்பிரேக்கபிள்’ உட்பட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.


நடிகர் புரூஸ் வில்லிஸ் கடந்த சில நாட்களாக அபாசியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும், எழுதும் மொழியை புரிந்துகொள்ளும் திறனை இழந்துவிடுவர். மூளையில் பாதிப்பு அல்லது பக்கவாத நோய்களால் இந்தப் பிரச்னை ஏற்படும்.

இதனால், புரூஸ் வில்ஸ் தனக்கு மிகவும் பிடித்த நடிப்புத் தொழிலில் இருந்து விலகுகிறார் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

‘இது எங்கள் குடும்பத்திற்கு சவாலான தருணம். உங்களின் தொடர் அன்பு, கருணை மற்றும் ஆதரவை நாங்கள் மிகவும் விரும்புகிறோம்’ என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News