ஆரோக்கியமான உணவு பீப்.. அரசியலாக்கக் கூடாது என எச்சரிக்கும் டாக்டர் ஷர்மிளா !!
ஆரோக்கியமான உணவு பீப்.. அரசியலாக்கக் கூடாது என எச்சரிக்கும் டாக்டர் ஷர்மிளா !!
சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளா, அரசியலில் ஆர்வம் கொண்டவர். டிவி தொடர்களில் நடித்துக்கொண்டே சேவையில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் அரசியலிலும் பெரும் கவனம் செலுத்தி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகூறி வருகிறார். இவரது கணவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இந்த நிலையில், டாக்டர் ஷர்மிளா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களுக்கு நெத்தியடியாக கருத்து தெரிவித்தார். மாட்டுக்கறி சாப்பிடுவது போன்று வெளியிட்ட வீடியோவானது, நாம் சாப்பிடுகிறோம் என்பதை தாண்டி பீப்பில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள், பீப்பில் இருக்கும் அரசியல் குறித்து புரிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது.
ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்வதற்கு பீப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இதை அரசியலாக்கி பீப் சாப்பிடக்கூடாது என்கிறார்கள் சிலர். என்னதான் பீப் சாப்பிடக்கூடாது என்று சொன்னாலும் மாட்டிறைச்சி ஏற்றுமதி என்பது அதிகமாகவே உள்ளது. அதுவும் உயர் வகுப்பினர் என்று சொல்லக்கூடியவர்கள்தான் அதிக அளவில் அதை ஏற்றுமதி செய்கிறார்கள்.
வணிகரீதியாக இருந்தால் எதுவென்றாலும் ஓகே, ஆனால் மனிதனின் வாழ்வியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று வரும்போது, இதையெல்லாம் செய்யக்கூடாது என்று மற்றவர்களுக்கு கண்டிஷன் போடுவது அபத்தமான விஷயம்.
ஒரு உணவை சாப்பிடுவதும் சாப்பிடாததும் தனிமனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அதில் உங்களின் கொள்கைக்காகவும், உங்களுடைய மதரீதியான காரணங்களுக்காகவும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இதை சாப்பிடக்கூடாது என்று உத்தரவு போடுவது அபத்தம். ‘இதையெல்லாம் இவர்கள் பேசுவார்கள், இவர்களுக்கென்று வந்தால் செய்வார்களா?’ என நிறையபேர் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். அதற்கு அந்த காணொலி பயனுள்ளதாக இருந்தது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சங் பரிவார கும்பல், குறிப்பாக வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் நிர்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் ஊடுருவிவிட்டார்கள். அதனால்தான் திடீர் திடீரென பிரச்சனைக்குரிய விஷயங்கள் நடக்கின்றன, என அவர் கூறினார்.
newstm.in