#BREAKING:- பிரபல காமெடி நடிகர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

#BREAKING:- பிரபல காமெடி நடிகர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

Update: 2022-05-26 15:04 GMT

இதய கோளாறு காரணமாக பிரபல காமெடி நடிகர் போண்டா மணி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளவர் போண்டாமணி. கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து பல கலக்கல் நகைச்சுவை காட்சிகளை உருவாக்கியவர் போண்டா மணி.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு போண்டா மணி பாண்டிபஜாரில் வாட்ச்மேன் பணியில் சிறிது காலம் இருந்துள்ளார். வடிவேலு உடன் இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ், வின்னர், மருதமலை போன்ற படங்கள் போண்டா மணிக்கு புகழை தேடித் தந்தன.

இந்நிலையில் இதய கோளாறு காரணமாக போண்டா மணிக்கு இன்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News