நாளை முதல் மீண்டும் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

நாளை முதல் மீண்டும் வெப்ப அலை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Update: 2022-05-10 14:10 GMT

நாட்டில், கடந்த சில ஆண்டுகளாகவே வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில்  நாளை முதல் வரும் 15-ம் தேதி வரை வெப்ப நிலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், நாளை (11-ம் தேதி) வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது, நடப்பு ஆண்டில் இயல்பான வெப்ப அளவை விட ஒரு டிகிரி அதிகம் ஆகும்.

Similar News