அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை !!

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை.. இந்த மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-06-15 20:11 GMT

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது. அந்த வகையில், தமிழகப் பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதாவது 16,17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று, வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News