தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழை..!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழை..!!

Update: 2022-07-14 21:00 GMT

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூலை 16 முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, தென்கிழக்கு, மத்திய  கிழக்கு அரபிக்கடலில் பலத்த காற்று வீசும்.

இன்றும், நாளையும், தமிழகம், ஆந்திரா கரையோரப் பகுதிகள், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீசக்கூடும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Similar News