இன்று இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!
இன்று இந்த 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !!
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று ( ஜூலை 8) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான அல்லது லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை மேகமூட்டமான வானிலை காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
வானிலை ஆய்வு மையத் தகவல்படி, வியாழக்கிழமை நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக் கல்லாறு மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 9 செ.மீ., சோலையாறு, மேல் பவானி, வால்பாறை உள்ளிட்ட இடங்களில் தலா 7 செ.மீ., சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
newstm.in