இந்த 23 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !
இந்த 23 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டும்.. வானிலை மையம் எச்சரிக்கை !
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 23 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில் இன்றும் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் நேற்றிரவு ஒருசில இடங்களில் கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது. இதனால் காலை முதல் சென்னை குளிர்ச்சியான காலநிலையுடன் உள்ளது.
newstm.in