இன்றும் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

இன்றும் இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை !!

Update: 2022-04-16 07:30 GMT

தமிழகத்தின் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நேற்று 5 நகரங்களில் வெயில் சதம் அடித்தது. கடும் வெப்ப அலையால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனிடையே, பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. 

இந்நிலையில், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (ஏப்.16) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஏப்.17, ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 18 மற்றும்19 ஆம் தேதிகளில் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 

இதேபோல, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை விடுக்கப்படவில்லை.


newstm.in

Similar News