ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் ரத்து.. காவல்துறை அதிரடி அறிவிப்பு..!

ஹெல்மெட் போடலன்னா லைசென்ஸ் ரத்து.. காவல்துறை அதிரடி அறிவிப்பு..!

Update: 2022-04-10 05:00 GMT

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகர போலீசார் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ராங் சைடில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். முன்னதாக, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பரிசீலிக்கப்பட்டது.

பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது. தற்போது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ராஜ்திலக் ரோஷன் கூறுகையில், “ஹெல்மெட் அணியாதவர்களுக்கு வழக்கம்போல இ-செலான் வழங்கப்படும்.

மேலும், அதுகுறித்த தகவல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்படும். அவர்கள், ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்வார்கள்.

அதேபோல், விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள போக்குவரத்து சவுக்கியில் 2 மணி நேரம் வீடியோ காட்சிகள் காண்பிக்கப்படும்” என்றார்.

Similar News