தேர்வெழுதும் மாணவர்களுக்கு உதவி எண்.. கல்வித்துறை அறிவிப்பு..!

தேர்வெழுதும் மாணவர்களுக்கு உதவி எண்.. கல்வித்துறை அறிவிப்பு..!

Update: 2022-04-21 16:39 GMT

இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு தொடர்பான தங்களின் குழப்பம், சந்தேகங்களுக்கு நிவர்த்தி காணும் நோக்கில், கல்வித்துறை இலவச தொலைபேசி எண் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டாம் ஆண்டு பியூசி தேர்வு நாளை (22-ம் தேதி) தொடங்கி, மே 18-ம் தேதி  வரை நடைபெறவுள்ளது.

மாநிலத்தின் 1,076 தேர்வு மையங்களில் காலை 10.15 மணி முதல், மதியம் 1.30 மணி வரை தேர்வு நடக்கும்.

தேர்வு எழுத ஆஜராகும் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து, கேஎஸ்ஆர்டிசி - பிஎம்டிசி உட்பட அனைத்து போக்குவரத்துக்கழக பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்.

தேர்வு தொடர்பான குழப்பம் மற்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து கொள்ள 080 - 2308 0864 என்ற இலவச உதவி எண் துவங்கப்பட்டுள்ளது.

இந்த தொலைபேசி எண், தினமும் காலை 10 மணி முதல், மாலை 5.30 மணி வரை செயல்படும்.

மாணவர்கள், பெற்றோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெறலாம்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News