ஹேய் ஜாலி! இன்று முதல் மக்களுக்கு அனுமதி!!

ஹேய் ஜாலி! இன்று முதல் மக்களுக்கு அனுமதி!!

Update: 2022-02-03 06:00 GMT

கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப் பிரபல சுற்றுலா தளம் வண்டலூர் உயிரியல் பூங்கா. தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூர் பூங்காவில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அன்று ஒரே நாளில் 70 ஊழியர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது.

கொரோனாவால் பாதிக்க விஷ்ணு என்ற ஆண் சிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அதற்கு முன்பே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீலா மற்றும் பத்மநாபன் என்ற இரு சிங்கங்கள் மரணமடைந்தது.

பூங்கா ஊழியர்கள் மற்றும் வன விலங்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பூங்கா முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் 03.02.2022 இன்று முதல் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்படுகிறது.

பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. இதைத் தொடா்ந்து, மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையையும் மாநகராட்சி தளா்த்தியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News