ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த தடை - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த தடை - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு..!!
கோவில்களில் திருவிழாக் காலத்தில் கலாசார ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதால் காவல் துறையினர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதித்து இருந்தனர்.
கோவில்களில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்தக் கோரி மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோவில் திருவிழாக்களில் ஆடல் மற்றும் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், கோவில்களில் திருவிழாக்கள் வழக்கம்போல நடைபெறலாம் என்றும், ஆனால் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சியை நம்பி ஏராளமான கலைஞர்கள் குடும்பங்கள் இருந்தன. பின்னர், நீதிமன்ற தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தொழிலை நம்பியிருந்த கலைஞர்கள் வேறு தொழிலுக்கு மாறிச்சென்றுவிட்டனர். ஆனால், இன்னும் சில கலைஞர்கள் மட்டும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சி தொழிலை நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.