கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம்.. கர்நாடக மாணவிகள் ஆவேசம்..!
கல்வியை விட ஹிஜாப் தான் முக்கியம்.. கர்நாடக மாணவிகள் ஆவேசம்..!
ஹிஜாப் விவகாரத்தில் மாநில அரசின் உத்தரவு செல்லும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு முஸ்லிம் மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து கர்நாடகாவின் ஹாசனை சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் கூறுகையில், ‘ஹிஜாப் எங்கள் உரிமை. அதை யாரும் பறிக்க முடியாது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக உள்ளது. கல்விக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்போம்; ஆனால், ஹிஜாப்பை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஹிஜாப் எங்கள் மூச்சு.
பல ஆண்டுகளாக இதை அணிந்துதான் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வருகிறோம். திடீரென தடை செய்தால் எப்படி..? வரும் 21-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
ஹிஜாப் அணிந்து தான் தேர்வு எழுத வருவோம். ஒரு வேலை அனுமதி மறுத்தால், நாங்கள் தேர்வை புறக்கணிப்போம். கல்வியை விட ஹிஜாப் தான் எங்களுக்கு முக்கியம்’ என்று ஆவேசமாக தெரிவித்தனர்.