ஹிஜாப் விவகாரம்.. மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு !!
ஹிஜாப் விவகாரம்.. மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு !!
ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ள நிலையில், மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோர் கொண்ட அமா்வு இன்று தீர்ப்பு அளித்தது. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹிஜாப் தடைக்கு எதிரான சரியான முகாந்திரங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது நியாயமான கட்டுப்பாடுதான். பள்ளிகளில் மதத்தை அடையாளப்படுத்தும் ஆடைகள் அணிவதை அனுமதிக்க முடியாது. அரசின் கல்வி நிறுவன சீருடை சட்டத்துக்கு அனைவரும் உள்பட்டவர்கள் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில் 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கா்நாடகத்தில் ஹிஜாப் சர்ச்சை விவகாரம், பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் தொடங்கியது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும் ன பிப்.5ஆம்தேதி கா்நாடக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பெரும் போராட்டம் நடத்தினர். அரசின் உத்தரவுக்கு ஆதரவுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை ஏற்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in