அரசு விழாவில் இந்து மத பூஜை... கடுப்பான திமுக எம்.பி!! VIDEO

அரசு விழாவில் இந்து மத பூஜை... கடுப்பான திமுக எம்.பி!! VIDEO

Update: 2022-07-16 20:31 GMT

தருமபுரி அருகே ஏரி சீரமைப்பு பணி தொடக்க விழாவில் இந்து மதம் சார்ந்த சம்பிரதாயம் கடைபிடித்ததை கண்டித்து அதிகாரிகளுடன் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரியில் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற பொதுப்பணித்துறை மூலம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், அவா்களை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர்.

இதனை அடுத்து பணி தொடக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கு பணி தொடங்கும் பொழுது சமஸ்கிருத வேத மந்திரம் முழங்க பூமி பூஜை நடைபெற்றது. இதனை பார்த்து கோபமடைந்த தருமபுரி எம்.பி. செந்தில்குமார் இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை என்றார்.

அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா தெரியாதா என அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய அவர், அது இந்து மத நிகழ்ச்சியா மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் பாதர் எங்கே? இஸ்லாம் மதத்தில் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? என அதிகாரியை கேள்விகளால் தொலைத்தார்.

முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடை பெறுவதில்லை என்றும் இது திராவிட மாடல் ஆட்சி. இது போன்ற நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்து நடத்துங்கள் ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது என்று கண்டித்தார்.

பின்னர், எந்தவித பூஜையும் இல்லாமல் ஏரி சீரமைப்பு பணியை தருமபுரி எம்.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார். நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


newstm.in

Similar News