நாளை இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!
நாளை இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!
சாமிதோப்புஅய்யா வைகுண்டசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந் தேதியை அய்யா வழி பக்தர்கள், அய்யா வைகுண்டர் அவதார தின விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவதார தினவிழா நாளை மார்ச் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது.அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்....
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.அன்றைய தினம் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது எனவும் விடுமுறையை ஈடுகட்டும் விதமாக மார்ச் 12ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் அரசு தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.