தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ...!!
தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ...!!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை தங்கு தடையின்றி வாங்குவதற்கு வசதியாக மாதந்தோறும் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக முதல், இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் நிியாயவிலை கடை ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்பட்டன.
ரேஷன்கடை பணியாளர்களுக்கு அன்று விடுமுறை வழங்கப்படாததால், அதற்கு மாற்று நாளாக (மார்ச் 19-ம் தேதி) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இன்று செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.