வரும் 14-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை.. அரசு அறிவிப்பு..!

வரும் 14-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை.. அரசு அறிவிப்பு..!

Update: 2022-02-08 11:00 GMT

கோவா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, இந்த 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், முதற்கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் 10-ம் தேதியும், கடைசி கட்ட தேர்தல் மார்ச் மாதம் 7-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கோவாவில் சட்டசபை தேர்தலையொட்டி, வரும் 14-ம் தேதி பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக, கோவாவில் வரும் 14-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News