தமிழகம் புதுவையில் நாளை முதல் 4 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
தமிழகம் புதுவையில் நாளை முதல் 4 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
தமிழகம் புதுவையில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 முதல் 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாளை 14-ம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மறுநாள் ஏப்ரல் 15-ம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினமும் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள்.இதனால், பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதை ஏற்ற அரசு, ஏப்ரல் 16-ம் தேதி தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகளுக்கு 16-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் 14 முதல் 18-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும், 18 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.