பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு..!

Update: 2022-02-28 15:30 GMT

மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி நாளை (1-ம் தேதி) இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநில அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அவசர பணிகளுக்காக மட்டும் அரசு  தலைமை மற்றும் கிளை கருவூலங்கள் குறிப்பிட்ட அளவு  பணியாளர்களை கொண்டு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய, மார்ச் 12-ம் தேதி பணி நாளாக கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News