வரும் 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்கள் ஹேப்பி!!

வரும் 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! மாணவர்கள் ஹேப்பி!!

Update: 2022-03-14 18:17 GMT

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மார்ச் 18 வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி 4ஆம் தேதி பெளர்ணமி தினத்தில் பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அந்த வகையில், நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், காலை, மாலை இருவேளையும் நெல்லையப்பருக்கு லிங்க பூஜை, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு ஆராதனை உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.

இதில், திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மார்ச் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே, திருநெல்வேலி மாவட்டத்திற்கு 18.03.2022 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது.

18.03.2022 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 26.03.2022 கடைசி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

newstm.in

Similar News