விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் போலீசார்..!

விடுமுறை நாட்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் போலீசார்..!

Update: 2022-03-17 06:30 GMT

மகாராஷ்டிரா மாநில போலீசாருக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு (சி.எல்.) வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போலீசாருக்கு தற்செயல் விடுப்பு நாட்களை 20 ஆக அதிகரித்து மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை இணை அமைச்சர் சாம்புராஜ் தேசாய் சட்டசபையில் கூறுகையில், "மகாராஷ்டிரா அரசு போலீசாருக்கு வழங்கப்பட்டு வரும் தற்செயல் விடுப்பு நாளை 12-ல் இருந்து 20 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல், வார விடுமுறைக்கு முந்தைய நாள் போலீசாருக்கு இரவு பணி வழங்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

போலீசாருக்கு விடுமுறை நாள் அதிகரிக்கப்பட்டது குறித்து உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " போலீசார் பண்டிகை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் சமயங்களில் விடுமுறை எடுக்க முடிவதில்லை. எனவே அவர்களுக்கு தற்செயல் விடுப்பு நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

Tags:    

Similar News