பள்ளி சிறுவனுக்கு வீடு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!

பள்ளி சிறுவனுக்கு வீடு.. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!

Update: 2022-02-25 16:09 GMT

தனியார் இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, தமிழக முதல்வர் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

அப்போது, தாங்கள் வறுமை நிலையில், வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் எனவும் மாணவர் அப்துல் கலாமின் பெற்றோர் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர், அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என, துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில், இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும்படி கேட்டுக் கொண்டேன்.

நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்க உத்தரவிட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Similar News