அரசு இணைய சேவை மையங்களில் பதிவு செய்தால் தமிழ்நாடு அரசின் மாதாந்திர இதழான தமிழரசு, இல்லம் தேடி வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழரசு இதழானது தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் ஒரு மாத இதழ் விலை ரூ.20. ஆண்டுச் சந்தா ரூ.240ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கான ஆயுள் சந்தா ரூ.2 ஆயிரமாக உள்ளது.
சந்தா தொகையை அரசு இ-சேவை மையங்களின் மூலமாக செலுத்தலாம். பெயா், முகவரி விவரங்களைத் தெரிவித்து தபால் மூலமாக இதழைப் பெறலாம். தமிழரசு இதழுக்கு www.tamilarasu.org என்ற இணையதளத்திலும் சந்தா தொகையை நேரடியாகச் செலுத்தலாம்.
அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்தால் இல்லம் தேடி வரும்
— TN DIPR (@TNDIPRNEWS) March 16, 2022
தமிழ்நாடு அரசின் “தமிழரசு”இதழ்#CMMKSTALIN | #TNDIPR | #செய்தித்துறை @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @jeyaseelan_vp pic.twitter.com/0J0oX7s4El
வங்கி வரைவோலை, பணவிடை மூலமாகவும் இதழுக்கான தொகையை அளிக்கலாம். பெயா், முகவரி, கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன், இணை இயக்குநா் (வெளியீடுகள்), தமிழரசு அலுவலகம், ராஜீவ்காந்தி சாலை, கானகம், தரமணி, சென்னை - 600 113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in