சிகிச்சைக்கு வந்த மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை.. டாக்டர் கொடூரச் செயல் !!

சிகிச்சைக்கு வந்த மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை.. டாக்டர் கொடூரச் செயல் !!

Update: 2022-02-07 08:20 GMT

சிகிச்சைக்கு வந்த மாணவரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டருக்கு கடும் தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரீஷ் (58). மனநல மருத்துவரான இவர் பல டிவி நிகழ்ச்சிகளையும் நடத்தி கேரள மக்களிடம் பிரபலமானார். இதனால் அவரிடம் சிகிச்சை பெறவும் ஆலோசனை பெறவும் ஏராளமானோர் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், திருவனந்தபுரத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் படிப்பில் கவனம் இன்றி இருந்துள்ளான். இதனால், அந்த மாணவனை பெற்றோர், டாக்டர் கிரீஷிடம் அழைத்து சென்றனர். அப்போது, பெற்றோரை சிகிச்சை அறையின் வெளியில் காத்திருக்கவைத்துவிட்டு, மாணவனை மட்டும் டாக்டர் அறைக்குள் அழைத்து சென்றார்.

தனியாக இருந்த மாணவனிடம் டாக்டர் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மிரட்டி ஓரின சேர்க்கையிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவ்வப்போது சிகிச்சை வரவேண்டும் என கூறி மாணவரிடம் தொடர்ந்து அத்துமீறியுள்ளார். இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது இல்லையெனில் கொன்றுவிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் அச்சம் காரணமாக மாணவரும் வெளியே கூறாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மாணவனின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டதை கண்டு பெற்றோர் அவனிடம் விசாரித்தனர். அப்போதுதான், டாக்டரின் நடவடிக்கைகள் வெளிவந்தது. இது பற்றி திருவனந்தபுரம் போலீசில் பெற்றோர் புகாரளித்தனர். இந்த சம்பவம் கடந்த 2017ம் ஆண்டு நடந்துள்ளது. போலீசார் டாக்டர் கிரீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மாணவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கு திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன், டாக்டர் கிரீசுக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, அவருக்கு தண்டனை கிடைக்க போலீசார் பல்வேறு சாட்சியங்களை அளித்தனர். அதில், டாக்டர் கிரீஷ் மீது ஏற்கனவே சிகிச்சைக்கு வந்த ஒரு மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், திருமணமான ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாகவும் புகார்கள் உள்ளன. இதன் அடிப்படையிலும் அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர்.


newstm.in


 

Tags:    

Similar News