மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த ரோட்டில் நிகழ்ந்த கௌரவ கொலை..!!
மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த ரோட்டில் நிகழ்ந்த கௌரவ கொலை..!!
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பில்லாபுரம் நாகராஜ் ஐதராபாத்தில் உள்ள கார் ஷோரூமில் சேல்ஸ் மேனாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி நாகராஜும் , சுல்தானாவும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ஐதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், நாகராஜ் , தனது மனைவி சுல்தானாவுடன்,புதன்கிழமை இரவு ஐதராபாத் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகே வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் அவர் வந்த போது அவரது மோட்டார் சைக்கிளை மறித்த 4 பேர் கொண்ட கும்பல், மனைவி சுல்தானாவின் கண்முன்னே நாகராஜை கத்தியால் குத்தி கீழே சாய்த்தனர்.
உயிருக்கு போராடிய அவரை காப்பாற்ற மனைவி போராடிய நிலையில், அவரை பிடித்து இழுத்து போட்டு விட்டு , நாகராஜை சரமாரியாக அடித்து கொடூரமாக கொலை செய்தது அந்தக் கும்பல். தாக்குதல் நடத்திய 4 பேரும் தனது உறவினர்கள் என்பதை அறிந்த சுல்தானா தனது கணவரின் உயிரை காக்க போராடினார். ஆனால் ஆணவ கொலை வெறியில் இருந்த அந்த 4 பேரும் அடங்கவில்லை.
இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த நடுரோட்டில் நிகழ்ந்த நிலையில் சுற்றி இருந்த அனைவரும் இந்த கொடூர சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ள அவலமும் அரங்கேறியுள்ளது. பின்னர் சுல்தானா அருகில் இருந்தவர்களிடம் தாக்குதலை தடுக்கும்படி கொஞ்சிய நிலையில் அருகில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்திய முகமது மற்றும் அவரது உறவினர் அகமதுவை அடித்து உதைத்துனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளிகள் முகமது மற்றும் அகமதுவை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.