கொடூரம்! குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை!!

கொடூரம்! குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை!!

Update: 2022-03-14 20:25 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடன் தொல்லையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டுநரான கார்த்திக் - பாரதி(21) தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள். கார்த்திக் அதிகமாக  கடன் வாங்கி உள்ளதால் அதனை திருப்பி செலுத்த முடியாமல் மனைவி பாரதி வேதனை அடைந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த பாரதி தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து வீட்டின் அறையில் தூக்கில் தொங்கவிட்டார். அதன்பிறகு பாரதியும் விஷமருந்தி வீட்டின் ஹாலில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக பாரதி கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதில் தனது கணவர் கார்த்திக்கு அதிக அளவில் கடன் இருப்பதாலும் அதனை அடைக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

வேறு ஏதும் காரணம் இல்லை எனவும், பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் காதல் கல்யாணம் செய்து கொண்டது தவறு என்று வருந்தி கடிதம் எழுதியுள்ளார். தற்கொலைக்கு முன்பாக பாரதி தனது தாய் சித்ராவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

தாய் வருவதற்குள் மூன்று பேரும் உயிரிழந்தர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News