கொடூரம்! பழங்குடியின சிறுமி கல்லால் அடித்துக் கொலை!!
கொடூரம்! பழங்குடியின சிறுமி கல்லால் அடித்துக் கொலை!!
பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது பழங்குடியின சிறுமி, தனது வீட்டின் அருகில் இருக்கும் மாமரம் மற்றும் முந்திரி பண்ணையை பராமரித்து வருவது வழக்கம். அப்படி பண்ணைக்கு சென்ற சிறுமி இரவாகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து மறுநாள் அங்கு ஒரு குழியில் சிதைக்கப்பட்ட முகத்துடன் சிறுமியின் சடலம் இருப்பதை சிலர் பார்த்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அந்த சிறுமி, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், சிறுமியை பின் தொடர்ந்து வழியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அந்த சிறுமியின் முகத்தை கல்லால் அடித்து சிதைத்து கொலை செய்து, சடலத்தை குழியில் வீசியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in